பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு பொருள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது பால். இதில் பல வைட்டமின் சத்துக்கள் உள்ளது. ஆனால் நாம் குழந்தைகளுக்கு சளி பிடிக்க கூடாது என்பதற்காக பாலை நன்றாகக் கொதிக்க வைக்க செய்கிறோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது, அவ்வாறு செய்தால் பாலின் முழு நன்மைகளும் போய் விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பால் கொதிக்க ஆரம்பித்த பிறகு நெருப்பை குறைத்து பாலை நீண்ட நேரம் கொதிக்க வைக்க வேண்டும் என்று நாம் நம்புகிறோம்.
அவ்வாறு செய்தால் பாலில் உள்ள நுண்ணுயிர்கள் அழிக்கப்படும் என்று குழந்தை பருவத்திலிருந்து நமக்கு கூறப்படுகிறது.பாலை நீண்ட நேரம் கொதிக்க வைப்பதன் மூலம் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் உண்மை அது இல்லை. நீண்ட நேரம் பாலை கொதிக்க வைப்பதால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுவதும் அழிக்கப்பட்டு விடுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
அவ்வாறு கொதிக்க வைத்த பாலை நீங்கள் குடிப்பதால் உங்களுக்கு எவ்வித பலனும் கிடைக்காது எனவும் கூறுகின்றனர்.ஒரு முறை பால் பொங்கியதும் அடுப்பை அணைப்பதே சிறந்த வழி. இனியாவது பாலை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டாம். ஒருமுறை கொதிக்க வைத்தாலே போதுமானது.