வவுனியா வடக்கில் கடும் காற்று: இளம் விவசாயிக்கு ஏற்பட்ட இழப்பு!

Date:

வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடுவைச் சேந்தவர் துரைாசா தமிழ்ச்செல்வன்.
29 வயதான இவர் ஒரு இளம் விவசாயி. தனது தோட்டத்தில் இம் முறை 1000 ஆயிரம்
பப்பாசிகளை வைத்து பராமரித்து இதுவரை ஜந்து இலட்சம் வரை செலவு செய்துள்ள
அவர். ஜந்து தடவைகள் மாத்திரமே பழங்களை விற்பனை செய்துள்ள நிலையில்
இன்று (25) வீசிய கடும் காற்று காரணமாக அவரது தோட்டத்தில் உள்ள 1000
பப்பாசிகளில் 600 மேற்பட்ட மரங்கள் முறிந்து வீழந்துள்ளன.

இதனால் பெரும் நட்டமடைந்த நிலையில் விரக்கத்தியில் காணப்படும் இவருக்கு
சுமார் 20 இலட்சம் வரை நட்டம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இந்த
அழிவு தொடர்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் ”விவசாயமும் மசிறும்
செயற்கையாளையும் அழிவு இயற்கையாளையும் அழிவு பப்பாசிப்பழம்
விற்பனைசெய்யமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தபோது இன்று வீசிய கடும்
காற்றின் தாண்டவம், ஈடுசெய்யமுடியாத பேரிழப்பை உண்டாக்கியுள்ளது” என
பதிவிட்டுள்ளமை அவரது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளது.

கொரோனா பயணத் தடை காரணமாக பப்பாசி பழங்களை விற்பனை செய்ய முடியாத
நிலையில் ஒவ்வொரு மரங்களிலும் அதிகமான பழங்கள் காணப்பட்டதாகவும் இதன்
காரணமாக மரங்கள் அதிக சுமையுடன் இருந்த நிலையில் இன்று(25) வீசிய கடும்
காற்று அந்த மரங்களை முறித்து சாய்த்துள்ளது எனத் தெரிவிக்கின்றார்.

உற்பத்திச் செலவை கூட பெற்றுக்கொள்ள முன்னர் இப்படியொரு அழிவை தான்
எதிர்பார்க்கவைில்லை எனவும் கவலையுடன் தெரிவித்துள்ளார் துரைராசா
தமிழ்ச்செல்வன்.

தற்போதைய நாட்டின் நிலைமையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களில்
விவசாயிகளே காணப்படுகின்றனர். உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாத நிலை,
சந்தைப்படுத்துகின்ற போது நியாயமான விலை கிடைக்காமை, இயற்கையினால் அழிவு
என பல்வேறு வழிகளில் விவசாயிகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு...

அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்கக் கோரி...

ஒரே நீதிமன்ற வளாகம்… ஒரே நாள்… ஒரே குடும்பம்- மூவர் இன்று வழக்கில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்