பெற்றோர் பிரிந்ததால் மகிழ்ச்சியே- ஸ்ருதி ஹாசன்

Date:

என் அப்பாவும், அம்மாவும் விவாகரத்து பெற்று பிரிந்தபோது அவர்களுக்காக சந்தோஷப்பட்டேன் என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். அவர் அப்படி சந்தோஷப்பட காரணம் இருக்கிறது.

உலக நாயகன் கமல் ஹாசனும், நடிகை சரிகாவும் கடந்த 1988ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு ஸ்ருதி, அக்ஷரா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த 2004ம் ஆண்டு கமலும், சரிகாவும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

சரிகா தற்போது மும்பையில் வசித்து வருகிறார். ஸ்ருதியும், அக்ஷராவும் பெற்றோர் வழியில் நடிக்க வந்துவிட்டனர். இந்நிலையில் தன் பெற்றோரின் விவாகரத்து குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

என் பெற்றோர் அவரவர் வாழ்க்கையை வாழ பிரிந்ததால் சந்தோஷப்பட்டேன். ஒத்துப் போகாத இரண்டு பேர் சில காரணங்களுக்காக சேர்ந்து இருப்பது முடியாது. அதனால் அவர்கள் பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.

அவர்கள் எனக்கும், தங்கைக்கும் அருமையான பெற்றோராக இருக்கிறார்கள். நான் என் அம்மாவை விட அப்பாவிடம் நெருக்கம். அம்மா நன்றாக இருக்கிறார். எங்கள் வாழ்க்கையில் பங்கு வகிக்கிறார். எல்லாம் நன்மைக்காகவே நடந்திருக்கிறது.

அப்பாவும், அம்மாவும் ரொம்ப நல்லவர்கள். ஆனால் சேர்ந்து இருந்தபோது அவர்களுக்கு இடையே ஒத்து வரவில்லை. அவர்கள் சேர்ந்து இருந்தபொழுதை விட பிரிந்த பிறகே சந்தோஷமாக இருந்தார்கள் என்றார்.கமலும், சரிகாவும் விவாகரத்து பெற்றது பற்றி ஸ்ருதி பேசியிருப்பது இது முதல் முறை அல்ல. விவாகரத்தானாலும் கமலும், சரிகாவும் இன்னும் நண்பர்களாக இருக்கிறார்கள்.

கெரியரை பொறுத்தவரை பவன் கல்யாண் நடிப்பில் அண்மையில் வெளியான வக்கீல் சாப் படத்தில் நடித்திருந்தார் ஸ்ருதி. அவர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் கோபிசந்த் இயக்கத்தில் ரவிதேஜா ஜோடியாக ஸ்ருதி நடிப்பில் வெளியான கிராக் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது அவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸுடன் சேர்ந்து சலார் படத்தில் நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கோபிசந்த் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் ஸ்ருதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.

spot_imgspot_img

More like this
Related

உக்ரைன் ஆயுதங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்திய Starlink? அமெரிக்கா மீது சந்தேகம்!

உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் Starlink இணையச் சேவையில் விதிக்கப்பட்ட வேகக்...

அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்து – குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் குழந்தை உட்பட...

இலங்கையில் இன்னும் அறிமுகமாகாத டெங்கு தடுப்பூசி! அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்?

இலங்கையில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த போதிலும், இதுவரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்