கேபிள்கார் விபத்தில் இஸ்ரேலியர்கள் 5 பேர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இத்தாலியில் உள்ள மேக்கியோர் ஏரியில் இருந்து மோட்டரோன் மலைசிகரத்திற்கு கேபிள் கார் வசதியுள்ளது. இந்த மலைச்சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 1400 மீட்டர் உயரத்தில் உள்ளது.
இந்த நிலையில் இந்த மலைச்சிகரத்திற்கு சென்ற கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கேபிள் கார் சுமார் 20 மீட்டர் அழத்திற்கு கீழே விழுந்து பல பள்ளத்தாக்கில் பலமுறை உருண்டு விழுந்தது.
இந்த விபத்தில் கேபிள் காரில் இருந்தவர்கள் காட்டுப்பகுதிகளில் சிதறி விழுந்தனர். இதில் படுகாயமடைந்த 5 பேர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1