யாழில் மது பிரியர்களின் வயிற்றெரிச்சலை கிளறிய மதுச்சாலை: இன்று வசமாக சிக்கியது!

Date:

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் பின் வீதியில் பயணத் தடை வேளையிலும் கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதமாக இயங்கி வந்த பிரபல மதுபானசாலை யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று முற்றுகையிடப்பட்டது.

முற்றுகையின் போது சட்டவிரோதமாக மதுபான கொள்வனவுக்கு வந்த ஒருவரும், மதுபானசாலை முகாமையாளர் மற்றும் மதுபானம் விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு விற்பனைக்கு தயாராக இருந்த ஒரு தொகுதி மதுபானங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இதில் 1/4 போத்தல் 100, முழுபோத்தல் 4, பியர் 8 கைப்பைற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாக அரசினால் பயணதடையின் போது மதுபானசாலைகள் மூடப்பட்டிருந்த போதிலும் குறித்த மதுபான சாலையில் அதிகவிலைக்கு மதுபான விற்பனை இடம்பெற்றதாக மது பிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த மதுபானசாலை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் கசிப்பு வியாபாரிகளுடன் பொலிஸாருக்கு தொடர்பா? சிறையில் கைதிக்கு மெத்தை வழங்கியதாகக் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் பெண் ஒருவரின் கையை பிடித்து இழுத்து பாலியல்...

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு வைத்தியர் டாக்டர்...

மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 2 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு —

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்