கரைச்சி பிரதேசசபை, கிளிநொச்சி சந்தையின் ஒரு பகுதி முடக்கம்!

Date:

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கொரோனா
நிலவரம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரினால் ஊடக சந்திப்பு
ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன் போதே மேற் குறிப்பிட்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்-

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரையும் 389 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ள நிலையில் அவர்களில் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 34 பேர்களும், பூநகரி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 40 பேர்களும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 84 பேர்களும், கரைச்சி பிரதேச செயலாளர்
பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 231பேருமாக மொத்தமாக 389 பேர் இனங் காணப்பட்டுள்ளனர்.

தற்பொழுது உள்ள நிலவரத்தின் படி 126 பேர் தொற்றுகு உள்ளாகி சிகிச்சை
பெற்று வருகின்றனர்.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதார பிரிவினரால் மேற்க்கொள்ளப்பட்ட
பி.சி.ஆர் பரிசோதனையின் படி நேற்றையதினம் 61 பேர் தொற்றுக்கு உள்ளாகி
இருப்பது இனங்காணப்பட்டுளள்து.

அதேவேளை நேற்றைய தினம் கரைச்சி பிரதேச சபையில் இருவருக்கு கொரோனா தொற்று உள்ளாகி இருப்பது இனங் காணப்பட்டதை அடுத்து இன்றைய தினம் கரைச்சி பிரதேசசபை முற்றாக முடக்கப்பட்டு அலுவலகத்தை சுத்திகரிப்பு செய்வதற்கான
நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது 1180 பேர் தனிமை
படுத்தப்பட்ட வர்களாக காணப்டுகிறார்கள் என தெரிவித்ததுடன்.

நேற்றையதினம் தொற்றுகு உள்ளானவர்களில் பலர் கண்டாவளை பிரதேச
செயலக்திற்கு உட்பட்டவர்களாக காணப்படுகின்ற போதும் அவர்கள் புதுக்குடியிருப்பு ஆடை தொழிச்சாலையுடன் தொடர்புடையவராக காணப்படுகின்றார்கள் என குறிப்பிட்டார்.

அத்துடன் கிளிநொச்சி பொது சந்தையில் வெற்றிலை கடை உரிமையாளர் ஒருவருக்கு
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்றைய தினம் இனங்கானப்பட்டதை
அடுத்து பொது சந்தையின் ஒரு பகுதியும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

தவெக அரசு மீதான குதிரை பேர புகார்: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தவெக அரசின் குதிரை பேரம் குறித்து சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விடக் கோரி...

சுரேஷ் சாலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில்

தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரிக்கப்பட்டு வரும்...

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமையை பெற்றது “தீவக லீக்”!

யாழ்ப்பாணம் தீவக உதைப்பந்தாட்ட லீக் 13 வருட போராட்டத்தின் பின் இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்