27.1 C
Jaffna
April 26, 2024
இந்தியா

ஒரு பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்த வேண்டும் : அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண் பயணிகள் இலவசமாக பயணம் செய்வது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மாண்புமிகு தமிழக முதலமைச்சர்‌ அவர்கள்‌ 07-05-2021 அன்று சாதாரண கட்டணம்‌ வசூலிக்கும்‌ மாநகர/நகர பேருந்துகளில்‌ மகளிர்‌ கட்டணமின்றி 08-05-2021முதல்‌ பயணம்‌ செய்யலாம்‌ என்று உத்தரவிட்டுள்ளார்‌. அரசு போக்குவரத்துக்‌ கழகங்களில்‌ பணிபுரியும்‌ ஒட்டுநர்கள்‌ மற்றும்‌ நடத்துனர்கள்‌, பயணம்‌ செய்யும்‌ மகளிரிடம்‌ கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்‌:

பயணிகள்‌ பேருந்திற்காக நிற்கும்‌ போது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்‌ செல்ல வேண்டும்‌. ஒரு பயணி நின்றாலும்‌ பேருந்தை நிறுத்தி ஏற்றிச்‌ செல்ல
வேண்டும்‌.
ஒட்டுநர்‌ பேருந்தை குறித்த பேருந்து நிறுத்தத்தில்‌ தான்‌ நிறுத்த வேண்டும்‌. பேருந்தை நிறுத்தத்திற்கு முன்போ/தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக்‌ கூடாது.
3. நடத்துனர்‌ வேண்டும்‌ என்றே பேருந்தில்‌ இடமில்லை என்று ஏறும்‌ பெண்‌ பயணிகளை பேருந்தில்‌ இருந்து இறக்கிவிடக்‌ கூடாது.

வயது முதிர்ந்த மகளிர்களுக்கு இருக்கையில்‌ அமர உதவி புரியவேண்டும்‌.
பெண்‌ பயணிகளிடம்‌ எரிச்சலூட்டும்‌ வகையில்‌ கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது.
பேருந்தில்‌ பெண்‌ பயணிகளிடம்‌ உபசரிப்புடனும்‌, அன்புடனும்‌ நடத்துக்‌ கொள்ள வேண்டும்‌.
பெண்‌ பயணிகள்‌ ஏறும்‌ போதும்‌, இறங்கும்‌ போதும்‌ கண்காணித்து ஓட்டுனருக்கு சமிக்ஞை செய்து பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அதிக நேரம் உல்லாசமாக இருக்க வற்புறுத்திய 48 வயது காதலியை கொன்ற 28 வயது இன்ஸ்டா காதலன்!

Pagetamil

நடு வீதியில் ஆம்லெட் போட்டவர்களால் பரபரப்பு!

Pagetamil

காங்கிரஸில் இணைகிறார் மன்சூர் அலிகான்

Pagetamil

‘என் மரணத்துக்கு குடும்பம்தான் காரணம்’: கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை!

Pagetamil

தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே நீச்சல் முயற்சி: நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த முதியவர்!

Pagetamil

Leave a Comment