இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமையை பெற்றது “தீவக லீக்”!

Date:

யாழ்ப்பாணம் தீவக உதைப்பந்தாட்ட லீக் 13 வருட போராட்டத்தின் பின் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டது.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் (06/06/2026) நுவரேலியா அரலிய விடுதியில் நடைபெற்றது.

இதன்போதே தீவக உதைப்பந்தாட்ட லீக் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் இணைக்கப்பட்டுட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனால் தீவக உதைபபந்தாட்ட வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் அங்கீகாரம் வரும் வாய்ப்பினை பெற்றுள்ளனர் என தீவக லீக்கின் தலைவர் திருக்கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மேலும் யாழ்ப்பாணத்தின் பின்தங்கிய பிரதேசமான யாழ்ப்பாணம் தீவக பகுதிகளின் வீரர்கள் திறமை இருந்தும் சாதிக்க முடியாத நிலையில் நீண்ட காலமாக காணப்பட்டனர்.
அவர்களுக்கு இது ஒரு களத்தை அமைத்துக் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கின் பத்தாவது உதை பந்தாட்ட லீக்காக யாழ் தீவக உதை பந்தாட்ட லீக்கிற்கு உத்தியோக பூர்வமாக இலங்கை உதை பந்தாட்ட சமூகத்தின் உறுப்புரிமையை பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் அவதானிப்பாளர்களாக FIFA பிரதிநிதிகள் மற்றும் Affc பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அதேநேரம் தீவக உதைப்பந்தாட்ட வீரர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியதுடன் பல அவமானங்கள் பல விமர்சனங்கள் பல புறக்கணிப்புகள் அனைத்திற்கும் தீர்வு கிடைத்துள்ளதாக உதைபந்தாட்ட ரசிகர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இன்றைய ராசி பலன் | 10.08.2026

♈ மேஷம்: புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நாள். பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ♉...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்