26.1 C
Jaffna
December 18, 2024
Pagetamil
சினிமா

தாராளமாக நிதி அளிக்குமாறு அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்; ரூ. 30 லட்சம் கொடுத்த விக்ரம்!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு சீயான் விக்ரம் ரூ. 30 லட்சம் நிதி அளித்திருக்கிறார். அவர் ஆன்லைன் மூலம் நிதி வழங்கியுள்ளார். இது குறித்து அறிந்த ரசிகர்கள் விக்ரமை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

கொரோனாவின் இரண்டாம் அலையால் பலரும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தாரளமாக நிதி அளிக்குமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களை கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து தொழில் அதிபர்கள், திரையுலக பிரபலங்கள் ஸ்டாலினை சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதி அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் சீயான் விக்ரம் ரூ. 30 லட்சம் நிதி அளித்துள்ளார். அவர் ஆன்லைன் மூலம் நிதி அளித்திருக்கிறார். முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ரூ. 50 லட்சம் நிதி அளித்தார்.

இதற்கிடையே சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் ஸ்டாலினை சந்தித்து ரூ. 10 கோடி நிதி அளித்திருக்கிறார். நிதி அளிக்குமாறு ஸ்டாலின் அறிக்கை வெளியிட்ட மறுநாளே அவரை சந்தித்து சூர்யா ரூ. 1 கோடி அளித்தார்.

அஜித், சிவகார்த்திகேயன், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோர் தலா ரூ. 25 லட்சம் அளித்தார்கள். ஜெயம் ரவி, இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன் ஆகியோர் தலா ரூ. 10 லட்சம் நிதி அளித்தனர்.

நிதி கேட்டு ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது,

இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு சிரமப்பட்டுவரும் நிலையில் இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கு நமது அரசு கூடுதலான நிதி ஆதாரங்களைச் செலவிட வேண்டிய தேவையும் உள்ளது. எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம். இச்சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இப்பேரிடர் காலத்தில் தாங்கள் ஒவ்வொருவரும் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன்கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என நான் உறுதி அளிக்கிறேன்.

மேற்கூறிய நடவடிக்கைகளுக்காக பெறப்பட்ட நன்கொடை விவரங்கள் மற்றும் இந்த நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாக பொதுவெளியில் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80(ழு)-ன்கீழ் 100 விழுக்காடு வரிவிலக்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல் நாட்டு பங்களிப்பு (ஓழுங்காற்று) சட்டம் 2010, பிரிவு 50-ன்கீழ் விலக்களிக்கப்படும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

Leave a Comment