மாகாணசபை தேர்தல் நடக்காது, நாமல் நிரந்தரமாக சிறையில் ஜனாதிபதியாக புதியமுகம் வரும் —நா.உ.இரா.அருச்சுனா தெரிவிப்பு

Date:

இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு எதிராக 1987ம் ஆண்டு 1988 ம் ஆண்டு  கலவரம் செய்த ஜே.வி.பி எங்களுக்கு மாகாணசபை தரும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம் அதேவேளை மாகாணசபை தேர்தல் நடக்காது என்பதுடன் நாமல் ராஜபக்ஷ இப்படியே நிரந்தரமாக சிறையில் அடைக்கப்படுவார் இலங்கைக்கு ஜனாதிபதியாக புதிதாக ஒருவர் வருவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அருச்சுனா தெரிவித்தார்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று திங்கட்கிழமை (16) இடம்பெற்ற  ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை அதேவேளை மாகாணசபை தேர்தல் இந்த வருடம் நடக்கும் என எதிர்பார்த்தோம் அது மார்ச் மாதம்  நடக்கும் என அமைச்சர் விமல் ரத்நாயக்க உட்பட தெரிவித்தனர் ஆனால் இந்த முறை வரவு செலவு திட்டத்தில் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்பதுடன் வடக்கில் 4 மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தில் அரசு எடுத்துள்ளது  எனவே தெளிவாக மாகாணசபை தேர்தல் நடக்காது

இந்த ஜே.வி.பி 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி பிரதமர் உட்பட நீதித்துறையை அவர்கள் கையில் வைத்திருக்கின்றன அப்படி ஒரு பலத்தை மக்கள் கொடுத்தனர். ஜே.வி.பி ரில்வின் சில்வாவின் உரையில் இளைஞர்கள் முழுக்க அவர்களுடன் இருப்பதாக தெரிவித்தார். எனவே அதில் இருந்து விலகி பாராளுமன்ற தேர்தலையே ஜனாதிபதி தேர்தைலை வைக்க மாட்டார்கள் என்ற நிலைமை இருக்கிறது

அதேவேளை நாமல் ராஜபக்ஷ இப்படியே நிரந்தரமாக சிறையில் அடைப்பது அவர்களது முக்கியமான நோக்கம்  அதற்கு ரயல்பாhர் என்று நடைமுறை என்ற ஒன்றைக் கொண்டுவந்து ஒரு போதும் வெளியில் விடப் போவதில்லை.

இந்த நிலையில் எதிர் காலத்தில் இலங்கைக்கு ஜனாதிபதியாக புதிதாக ஒருவர் வருவார்  என்பதுடன் சிங்கள மக்கள் மத்தியில் எந்த ஜனாதிபதி என்ற முக்கியம் அல்ல மூன்று நேரமும் சோறு இருந்தால் சரி இருந்தாலும் இந்த ஜனாதிபதியும் வெளியில் போவதற்கு அதிக காலம் இல்லை .

நான் ஒரு நாளும் ஒரு கட்சியிலும் இணையமாட்டேன் கட்சிகளில் இணைபவர்களை பார்த்தால் சுயமாக தேர்தலில் வெல்ல முடியாதவர்கள் தான் கட்சியில் சென்று இணைவார்கள் என்னை சஜித் பிரேமதாச,  ரணில்,  அவர்கள் கட்சிகளில் வடக்கு கிழக்கை பொறுப்பு எடுக்குமாறு கேட்டனர்.

நான் சுயேச்சையாக கொழும்பில் கேட்டு வெல்ல கூடிய நிலையில் இருக்கிறேன் எனவே இன்னொரு கட்சியில் சேர வேண்டிய தேவை இல்லை என்னை நம்பி எனது கட்சியில் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர் கட்சியை பதிவு செய்ய அனுப்பியுள்ளோம் ஆதலால் எனக்கு எவருடைய கட்சியிலும் போய் சேர வேண்டிய தேவை இல்லை

எதிரியுடைய எதிரி எனக்கு நண்பன் என தேசிய தலைவர் பேசுவார் அவ்வாறே செயல்படுவதுதான் இராஜதந்திரம் எனவே நாமலின் பரம எதிரி அநுரகுமார திஸநாயக்க எனவே எனக்கு அனுர எதிரி என்றபடியால் நாமலை தூக்கி பிடிப்பது அனுராவுக்கு குத்தட்டும் என ஆகவே நான் போய் நாமல் ராஜபக்ஷவின் கட்சியில் இணைவதாக இல்லை

எதிர்ப்பு அரசியல் செய்து என்ன மிஞ்சியது எனவே எதிர்ப்பு அரசியல் செய்ய நான் தயாரில்லை அதேவேளை தமிழ் தேசிய வாதத்தை விட்டுக் கொடுக்கவும் தயாரில்லை கார்த்திகை மாத உரை ஆரம்பித்ததே மாவீரர்களுக்கு.  எனது தந்தை மாவீரர் எனவே முட்டாள்கள் செய்யும் அரசியல் மக்களுக்கு ஒரு நன்மையும் பயக்காது அரசியல் என்பது ஒரு இராஜதந்திரம் முட்டாள்தனமாக அவருடைய கட்சி இவருடைய கட்சி என மாலை போட்டுக் கொள்வது அரசியல் அல்ல

நான் இப்போது செய்வது இராஜதந்திரமான நகர்வு எங்களுடைய அரசியல்வாதிகள் ராஜபக்ஷ குடும்பத்துடன் நல்லாக இருந்தனர் அவர்களது தனிப்பட்ட தேவைகளுக்காக எனவே நான் ஒருபோதும் எந்த கட்சியுடனும் இணையப் போவதில்லை என்றார்.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்