கிரிஷ் வழக்கில் நாமலுக்கு பிணை: ஆனாலும் சிறைவாசம் தொடரும்!

Date:

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (03), சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’  பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.

அதேவேளை, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இருப்பினும், அவர் மீது தொடரப்பட்டுள்ள வேறு சில சட்ட நடவடிக்கைகளில் இன்னும் பிணை கிடைக்கப்பெறாததால், நாமல் ராஜபக்ஷ தொடர்ந்து விளக்கமறியலிலேயே இருப்பார்.

‘கிரிஷ்’ பரிவர்த்தனை தொடர்பான சட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது பிணை மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் இன்று வழங்கியது.

கொழும்பு கோட்டையில் உள்ள ‘ட்ரான்ஸ்வொர்க்ஸ் ஸ்கொயர்’  பகுதியில் அமைந்திருந்த நிலத்தை, பன்முக மேம்பாட்டுத் திட்டத்திற்காக ‘கிரிஷ்’ நிறுவனத்திற்கு மாற்றியமைத்தபோது, ​​100 மில்லியன் ரூபாயைப்a லஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

குறித்த நிலத்தை அந்த நிறுவனத்திற்கு மாற்றும் நடவடிக்கைகளுக்கு உதவியதற்காகவே, இந்தத் தொகை லஞ்சமாகப் பெறப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் இரசாயன ஆயுதங்களை தயாரிக்கிறது: அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்த இஸ்ரேல்

ஈரான் தனது எதிரிகளுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராகி வருவதாகக்...

திருமலை துப்பாக்கிச்சூட்டின் பின்னணி!

திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் கடந்த முன்தினம் (2-ஆம் திகதி) இரவு நடத்தப்பட்ட...

உடல்நிலை காரணமாக மஹிந்தவின் மாமி ஊழல் வழக்கிலிருந்து விடுவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக, மூன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்