சாய்ந்தமருது பெண் சந்தைப் பகுதியில் ஒலிபெருக்கி பாவனைக்கு கட்டுப்பாடு விதிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

Date:

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெண் சந்தைப் பகுதியில் ஒலிபெருக்கி சாதனங்களின்  பயன்பாட்டை  கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த சந்தையை அண்மித்த பகுதியில் பள்ளிவாசல்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளதுடன், மையவாடியும் காணப்படுகின்றது. இந்நிலையில், சந்தைப் பகுதியில் பயன்படுத்தப்படும் அதிக சத்தத்துடனான ஒலிபெருக்கிகளால் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் மரணித்தவர்களின் இறுதிக்கிரியைகளுக்கும், அங்கு வருகை தரும் உறவினர்களுக்கும் இடையூறு ஏற்படுவதாகப் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்துடன், எதிர்வரும் மாதங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கும் குறித்த ஒலிபெருக்கிகளின் அதிக சத்தம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மாநகர சபை மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றில் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான நேரம், ஒலி அளவு உள்ளிட்ட விடயங்களில் உரிய கட்டுப்பாடுகளை விதித்து, நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் இவ்வாறான இடையூறுகளைத் தவிர்க்க முடியும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் ஒலிபெருக்கிப் பயன்பாடு மற்றும் ஒலி மாசுபாடு தொடர்பாக நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக, பொதுமக்களின் சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் அமைதியான வாழ்வுச் சூழலைப் பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பகுதியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தும் தரப்பினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குவதுடன், சட்ட வரம்புகளை மீறி அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதே வேளை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இத்தகைய செயற்பாடுகள் மதஸ்தலங்களில் நடைபெறும் வணக்க வழிபாடுகள் மற்றும் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் பொதுமக்கள் அசௌகரியமடைவதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில்  சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையம் ஆகியன இணைந்து  ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை  முன்னெடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் உலமாக்களுக்கென பிரத்தியேக சீருடை மற்றும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்

இலங்கை உலமாக்களுக்கென பிரத்தியேகமான சீருடை ஒன்றை அறிமுகப்படுத்தி அதனைச் சட்டமாக்க வேண்டும்...

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு மழைக்காலத்தில் செல்லும் நோயாளிகள் கடும் அவதி

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு மழைக்காலங்களில் செல்லும் நோயாளர்களும் பொதுமக்களும் தொடர்ச்சியாகப் பல்வேறு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்