எரிபொருள் விலைகள் எகிறின!

Date:

நேற்று (1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்தியமைத்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மண்ணெண்ணெய் தவிர ஏனைய எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலை விபரங்கள் வருமாறு:

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 397ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (முந்தைய விலை: ரூ. 392).

லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 543 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. (முந்தைய விலை: ரூ. 528).

பெட்ரோல் 92 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூபா 424 ஆகப் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (முந்தைய விலை: ரூ. 414).

பெட்ரோல் 95 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 490 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (முந்தைய விலை: ரூ. 475).

எனினும், மண்ணெண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, லீற்றர் ஒன்று தொடர்ந்து 285 ரூபாய் என்ற நிலையிலேயே விற்பனை செய்யப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழில் நேற்று 5 பேர் பலி

யாழ்ப்பாணம் வலி. வடக்குப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற நான்கு சம்பவங்களில்...

சேரன் காணாமல் போன ஒரு வருடத்தின் பின் சந்தேகநபர்கள் கைது!

இளைஞர் ஒருவர் மாயமான விவகாரத்தில், கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு, ஒரு வருடத்திற்குப்...

பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தவர் விரும்பும் வரை அமெரிக்காவில் தங்கலாம்: ட்ரம்ப்

கடந்த வாரம் பிரேசிலின் ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி தற்போதைய ஜனாதிபதி லூயிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்