வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு 36ஆவது ஆண்டு நினைவுகூறலும் ஊடகவியலாளர் மாநாடும் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

Date:

வடக்கு முஸ்லிம் மக்கள் தமது சொந்த மண்ணிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பின் 36 ஆவது வருட நினைவுகூறல் நிகழ்வும், சிறப்பு ஊடகவியலாளர் மாநாடும் இன்று (30) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு, இன்று மாலை 4.00 மணிக்கு யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நினைவேந்தல் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகள், யாழ்ப்பாணப் பிராந்தியத்தைச் சேர்ந்த உலமாக்கள், கல்வியியலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், அரசியல் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

வடக்கு முஸ்லிம் சமூகத்தின் தற்போதைய வரலாற்று ரீதியான கோரிக்கைகள், நியாயமான உரிமைகள் மற்றும் முக்கிய கருத்துக்களை உலகறியப் பதிவுசெய்து செய்தியாக வெளியிடும் பொருட்டு, அனைத்து ஊடக நண்பர்களையும் வழமை போன்று இந்நிகழ்வில் தவறாது கலந்துகொள்ளுமாறு யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் செயலாளர் என்.எம். அப்துல்லாஹ் அன்புரிமையுடன் அழைப்பு விடுத்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

முத்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

ஷார்ஜாவில் நாடு கடத்தப்பட்ட திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கைவாரு முத்து என்றழைக்கப்படும்...

ஆரையம்பதியில் பெண் ஒருவர் மீது பெற்றோல் ஊற்றி தீவைப்பு பெண் உயிரிழப்பு தீ வைத்த உறவினரான ஆண் கைது

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் வீடு ஒன்றின் வெளிப் பகுதியில் கதிரையில் உட்காந்திருந்த...

2027 ஏப்ரல் வரை TIN சான்றிதழ் கட்டாயமில்லை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்