தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

Date:

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் தலைவர் / பணிப்பாளர் நாயகம் லலித் பியூம் பெரேரா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, சாமபுர பகுதியில் அமைந்துள்ள காணி மற்றும் அங்குள்ள கட்டிடங்கள் அரசுக்குச் சொந்தமானவை எனக்கூறி, இடைக்காலக் குத்தகை ஒப்பந்தங்களைத் தயாரித்து, அதைத் தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கு குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொடுத்துள்ளதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்காக மூன்றாம் தரப்பினருக்கு முறையற்ற மற்றும் சட்டவிரோதமான முறையில் இளைஞர் சேவை மன்றத்தின் நிதியிலிருந்து 38 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், பணிப்பாளர் சபையின் முறையான அனுமதியின்றி அக்கட்டிடத்தைச் புனரமைப்பு செய்வதற்காக இளைஞர் சேவை மன்றத்தின் நிதியிலிருந்து 13 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு முறையற்ற வகையில் பணம் செலுத்துவதற்கு வழிவகுத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 51 லட்சம் ரூபாய் இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் இன்று (28) கைது செய்யப்பட்டிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஹோமாகம குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி கைது!

ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி (OIC), பொலிஸ் காவலில் இருந்த...

ஐநூறு போதை மாத்திரைகளுடன் சிஜடியினரால் யாழில் இருவர் கைது

யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,...

பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இடைக்கால அறிக்கையை முழுமையாக நிராகரிக்கிறோம்- மக்கள் செயல் அமைப்பு

யாழ் ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்