உக்ரைன் ஆயுதங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்திய Starlink? அமெரிக்கா மீது சந்தேகம்!

Date:

உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் Starlink இணையச் சேவையில் விதிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாடுகள், போர்க்கள நடவடிக்கைகளைப் பாதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிக்கு 160 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் ஆயுதங்கள் இணைய இணைப்பை இழக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை இரவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியின் ஆலோசகர், இந்த நடவடிக்கை தற்செயலானது அல்ல என்றும், அமெரிக்கா–உக்ரைன் இடையிலான அரசியல் பதற்றங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த எலான் மஸ்க், இராணுவப் பயன்பாட்டுக்கான Starshield சேவை அமெரிக்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதன் வேகக் கட்டுப்பாடுகளை அமெரிக்க இராணுவமும் இறுதியில் ஜனாதிபதியும் தீர்மானிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Starlink இணைய இணைப்புகள் ஓரளவு மீட்டெடுக்கப்பட்டதாக உக்ரைனின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையில், ரஷ்யாவின் பாரிய தாக்குதல்களால் உக்ரைனில் பலர் உயிரிழந்ததுடன், சுமார் ஆறு இலட்சத்திற்கும் அதிகமானோர் மின்சாரமின்றிப் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக இலகுரக ஏவுகணைகளை விரைவாக வழங்க பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் இதுவரை அதிகாரப்பூர்வ கருத்தை வெளியிடவில்லை.

spot_imgspot_img

More like this
Related

119 குடும்பத்தினருக்குக் காணாமல் போனோர் அலுவலகத்தில் அழைப்பு: இதுவரை 11,000 பேரிடம் விசாரணை

காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர் காணாமல் போன ஆட்கள்...

கொலையாளியின் மர்ம மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி கைது!

பாதாள உலகத் தலைவன் 'லொகு பட்டி' என்பவனுக்காக கூலிப்படையினராகச் செயல்பட்டதாகக் கூறப்படும்...

யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹூதிகள்

ஈரான் ஆதரவு ஹூதி போராளிகள், யேமனின் இடைக்காலத் தலைநகரான ஏடனில் உள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்