சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது: 100 பேரில் ஒருவராக இலங்கையர் கௌரவிப்பு

Date:

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவுசெய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் (BMICH) சிறப்பாக இன்று  நடைபெற்றது.

சர்வதேச சமாதான அமைப்பின் ஏற்பாட்டில் உலகளாவிய ரீதியில் சமாதானம், சமூகப் பணி மற்றும் மனிதநேயச் செயற்பாடுகளுக்காகப் பங்காற்றிய சிறந்த 100 ஆளுமைகளைச் கௌரவிக்கும் முகமாக இந்நிகழ்வு அமைக்கப்பட்டிருந்தது.

இதன்போது, நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட நேபாளத்தின் இலங்கைக்கான தூதுவரால்    விருதுக்குத் தெரிவான சாதனையாளரான உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத்திற்கு சர்வதேச விருது வழங்கி உத்தியோகபூர்வமாகக் கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சர்வதேச அமைப்புகளின் முக்கியப் பிரதிநிதிகள், தூதரக உயர் அதிகாரிகள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் விருந்தினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

spot_imgspot_img

More like this
Related

தாயின் தாலிக்கொடியை திருடி காதலனிற்கு கொடுத்த பணம்; உறவுப்பெண் மீது பழிபோட்டு நாடகம்: வங்கி ஊழியரான 22 வயது யுவதி கைது!

மட்டக்களப்பில் காதலனுக்காக தனது தாயின் எட்டரை பவுன் தாலிக்கொடியை திருடி அதனை...

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்