தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அச்சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்குமாறு வலியுறுத்தியும் நேற்று முன்தினம் முதல் நல்லூரில் தீயாக தீபம் தொடர் போராட்டமொன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
குறித்த போராட்டம் இறுதி நாளாக இன்று மாலை இடம்பெற்றதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கான மகஜர் வாசிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் யாழ் அலுவகத்திற்கு சென்று மகஜர் கையளிக்கப்பட்டது




