தையிட்டியில் தமிழ் மக்களின் சொந்தக் காணிகளைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துப் பிரம்மாண்ட விகாரை அமைக்கப்பட்டமைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.
மக்களின் நியாயமான போராட்ட முடக்கத்திற்காகப் பொலிஸார் பொய் வழக்குகளைத் தாக்கல் செய்து அச்சுறுத்தப் பார்க்கிறார்கள். இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இது தொடர்பான 5 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.
இது வெறும் காணி உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல! வடகிழக்கில் தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான இருப்பையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டம்.
அரசினதும் பொலிஸாரினதும் அடக்குமுறைகளுக்கு அஞ்சாது, எமது உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் ஒன்றாக அணிதிரள்வோம்!




