ஈழத் தமிழர் முன்னணி கட்சி அனோஜனின் விடுதலை கோரி களுவாஞ்சிக்குடி தொடக்கம் திருகோணமலை வரை வாகன பேரணி கையெழுத்து போராட்டம்

Date:

ஈழத் தமிழர்; முன்னணி கட்சி சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் மன்னித்து விடுதலை செய்ய கோரி களுவாஞ்சிக்குடி தொடக்கம் திருகோணமலை வரையிலான வாகன  பேரணி கையெழுத்து போராட்டம் இன்று திங்கட்கிழமை (28) கிரானில் உள்ள கட்சி காரியாலயத்தில் இருந்து ஆரம்பித்தனர்.
கட்சியின் தலைவர் ஜெயா சரவணாவின் நெறியாள்வையின் கீழ் கட்சியின் கன்னி நடவடிக்கையாக சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை விடுவிக்க கோரி பாரிய ஒரு கையெழுத்து போராட்டமான வாகன பேரணி கிரானில் அமைந்துள்ள கட்சிக் காரியாலயத்தில் இன்று காலை ஆரம்பித்து களுவாஞ்சிக்குடி சென்று அங்கிருந்து மட்டக்களப்பு நகர் காந்தி பூங்கா பிரதான பஸ் நிலையம் சென்று கையெழுத்துக்களை சேகரித்து கொண்டு

அங்கிருந்து ஏறாவூர், செங்கலடி, வந்தாறுமூலை, கிரான், வாழைச்சேனை ஊடாக வாகரை, வெருகல் ஆரையம்பதி முருகன் ஆலயத்துக்கு சென்று அங்கிருந்து திருகோணமலை நகர் சென்று கையெழுத்து இட்ட ஆவணங்களை ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கு கிழக்கு மாகாண ஆளுநரிடம் இன்றைய தினம் கையளிக்கவுள்ளதாக கட்சியின் ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

வைத்தியர் சுகுணன் மீது அவதூறு: அர்ச்சுனாவை நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தொடர்பில்...

ப்ரைட் ரைஸ் வாங்கி வந்து மனைவியின் கதையை முடித்த கணவன்

ரக்வான பகுதியில், குடிபோதையில் வீடு திரும்பிய சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்