மட்டக்களப்பில் துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை

Date:

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக ரி.56 ரக துப்பாக்கி ஒன்றையும் அதன் 30 ரவைகளை தன் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றவாளியாக இனங்காணப்பட்ட வாழைச்சேனை பேத்தாளை பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா பாக்கியராஜா என்பவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் வெள்ளிக்கிழமை (18) ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கடந்த 2014. செப்டம்பர் 12ம் திகதி வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள காவத்தமுனை பகுதியில் வைத்து சட்டவிரோதமாக ரி.56 ரக துப்பாக்கி அதன் 30 ரவைகளுடன் ராஜா பாக்கியராஜா அல்லது தேவமணி பாக்கியராஜா என்பவரை வாழைச்சேனை பொலிசார் கைது செய்து அவருக்கு எதிராக சட்டவிரோதமாக ரி.56 ரக துப்பாக்கியை உடமையில் வைத்திருந்தமை மற்றும் உயிர் உள்ள 30 துப்பாக்கி தோட்டாக்களை வைத்திருந்த இரு குற்றச்சாட்டின் கீழ் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் வழக்கின் எதிராளி சார்பில் சட்டத்தரணி பிரகாஷ் ஆஜராகியதுடன் வழக்காளியான பொலிஸ் சார்பில் அரச சட்டவாதி எஸ். அனுஷன் ஆஜராகி வாதாடி வந்தனர்.

இந்த நிலையில் குறித்த நபர் குற்றவாளியாக கடந்த மாதம் 08-24-2026 மன்றில் இனங்காணப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை 18ம் திகதி தண்டனை வழங்கும் தீர்ப்பு என நீதிபதி அறிவித்தார்.

இதன் பிரகாரம் இந்த வழக்கின் தண்டனைக்கான தீர்ப்பாக முதலாவது குற்றமான சட்டவிரோதமாக ரி.56 ரக துப்பாக்கி உடமையில் வைத்திருந்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும். இரண்டாவது குற்றமான உயிர் உள்ள 30 தோட்டாக்களை வைத்திருந்த குற்றத்திற்காக 25 ஆயிரம் ரூபா அபராதமாக செலுத்துமாறும் அதனை செலுத்த தவறினால் 3 மாத கால சாதாரண சிறை தண்டனை என நேற்று வெள்ளிக்கிழமை மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்தார்.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியுடன் காட்டுக்குகைக்குள் குடித்தனம் நடத்திய ரவிச்சந்திரனுக்கு பிணை!

உடதும்பர காவல் பிரிவுக்கு உட்பட்ட கரம்பகேதிய பகுதியில், மலை உச்சியில் உள்ள...

அமெரிக்க தடையை தவிர்க்க ‘கள்ளக்காதல்’ உத்தியை பயன்படுத்தியதா சீனா?

ஒரு சீனப் பெண் தொழிலதிபருடன் கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கியுள்ள என்விடியா தலைமைச்...

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் கள்ளக்காதல் விவகாரம்: சிங்கப்பூர் நிறுவனத்தின் விளக்கம்!

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் குறித்த சர்ச்சை தீவிரமடைந்து வரும் நிலையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்