சமூக விஞ்ஞானப் போட்டியில் தேசிய மட்டத்தை நோக்கி பயணிக்கும் லீடர் எம்.எச்.எம். அஷ்ரஃப் வித்தியாலய மாணவி இமானிக்கு கௌரவம்

Date:

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரஃப் வித்தியாலயத்திலிருந்து சமூக விஞ்ஞானப் போட்டியில் மாகாண மட்டத்திற்கு முதன்முறையாகத் தெரிவாகி, மூன்றாம் இடத்தைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவான மாணவி எஸ்.எப்.எஸ். இமானி கௌரவிக்கப்பட்டார்.

இம்மாணவியைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுடீன் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது. சமூக விஞ்ஞானப் போட்டியில் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் கல்முனை கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்தமைக்காக மாணவி இமானிக்கு இதன்போது பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், அவரது கல்விச் சாதனை கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சுரேஸ், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஸ்மா ஏ. மலிக், ஆசிரிய ஆலோசகர்களான எம்.ஐ. மௌஸுர், திருமதி டேவிட், வீ. தையூப் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் கலந்து கொண்டனர்.

சமூக விஞ்ஞானப் போட்டியில் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்ற மாணவி இமானியின் சாதனை, எதிர்காலத்தில் பாடசாலையின் மாணவர்களுக்கு கல்வி மற்றும் அறிவுசார் போட்டிகளில் சிறந்து விளங்குவதற்கான ஊக்கமாக அமையும் என நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் புதிதாக அனுமதிக்கப்பட்ட நான்கு மதுபானசாலைகளின் அனுமதிகளை ரத்துச் செய்யக் கோரி வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினர் போராட்டம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக அனுமதியளிக்கப்பட்ட நான்கு மதுபானசாலைகளின் அனுமதிகளை ரத்துச் செய்யுமாறு...

சிறைகளில் மதத் தலைவர்களின் நிலைகண்டு வெம்பியிருக்கிறேன் – அநுர ஜனாதிபதிக்கு நினைவுபடுத்திய டக்ளஸ்

அனைத்து மதங்களின் தலைவர்களும் சிறைச்சாலைகளில் கௌரவமாக நடாத்தப்படுவதை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த...

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டமை சகோதரத்துவ நம்பிக்கையை வலுப்படுத்துகிறது – காரைதீவு தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்