தையிட்டியில் ரூ.8.9 மில்லியன் விளையாட்டு திட்டம்

Date:

யாழ்ப்பாணம் – தையிட்டி ஸ்டார் விளையாட்டுக் கழக கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கலுக்கான ஆரம்ப நிகழ்வு இன்று விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகேவின் பங்கேற்புடன் நடைபெற்றது.
“பாடசாலைகள் மற்றும் பொதுவிளையாட்டு மைதானங்களில் விளையாட்டு கலாசாரத்தை உருவாக்குதல்” என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
8.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கலுக்கான பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று சம்பிரதாய பூர்வமாக நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகநாதன் சிறீபவானந்தராஜா, கருணைநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் கபிலன் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்