டெங்கு அபாயத்திலிருந்து மீள்கிறது கொழும்பு பல்கலைக்கழக அழகியல் பீடம்

Date:

டெங்கு பரவல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருந்த கொழும்பு அழகியல் பல்கலைக்கழகத்தை இன்று (13) முதல் மீண்டும் திறக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் பேராசிரியர் வசந்த குமார, நேற்று (12) தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களிடையே டெங்கு நோய்த்தொற்று அதிகரித்துள்ளதால், அறிவியல் பீடத்தை தற்காலிகமாக மூடி, கல்வி நடவடிக்கைகளை இணையவழியில் நடத்த நிர்வாகம் இன்று (13) முடிவு செய்யும் என அவர் கூறினார்.

பல்கலைக்கழகத்தின் கலை பீடம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு இணையவழியில் கல்வி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தூய்மையான இலங்கை திட்டத்தின் ஒரு பகுதியாக, அழகியல் பல்கலைக்கழகத்தில் நேற்று (12) தூய்மைப்படுத்துதல் மற்றும் புகை இடும் திட்டம் நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகம் டெங்கு இல்லாத இடமாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அழகியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சானி இம்புல்கொட தெரிவித்தார்.

தூய்மையான இலங்கைத் திட்டம், கொழும்பு மாநகர சபை, சுகாதார அமைச்சு மற்றும் முப்படைகள் இதற்குப் பங்களித்துள்ளன என்றும் அவர் கூறினார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, மொரட்டுவ பல்கலைக்கழகம் இவ்மாதம் 7ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டதுடன், இவ்மாதம் 21ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 17 பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டுள்ள நிலையில், பிற பல்கலைக்கழகங்களைத் தற்காலிகமாக மூட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும், தேவைக்கேற்ப பல்கலைக்கழகங்களில் இணையவழியில் கற்றல் நடவடிக்கைகளை நடத்துவது குறித்து நிர்வாகம் முடிவெடுக்கும் என்றும் அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

ஆறு தமிழ் கட்சிகள் முக்கிய விடயங்களில் ஒருமித்து செயற்பட திட்டம்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் இணைந்து...

30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கர்நாடக அரசு மரியாதையுடன் இசையரசி எஸ்.ஜானகி உடல் தகனம்

மறைந்த பிரபல பின்​னணி பாடகி எஸ்​.ஜானகி​யின் உடல், கர்​நாடக அரசின் முழு...

நீர்கொழும்பு சிறை விசாரணையில் பல மர்மங்கள்

6ஆம் திகதி நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது 8 சிறைச்சாலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்