அதிகாலையில் அதிர வைத்த சம்பவம்: மற்றொரு பாதாள உலக தலைவரும் ‘போடப்பட்டார்’!

Date:

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குழு தலைவரகள் ‘தப்பியோட முயல்வதும், பொலிசார அவர்களை சுட்டுக் கொல்வது’மான சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

இன்று அதிகாலை இலங்கையின் பயங்கரமான பாதாள உலகத் தலைவரான கொஸ்கொட தாரக என அழைக்கப்படும் தாரக பெரேரா விஜேசேகர பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பேலியகொட சிறப்பு குற்றப்பிரிவின் தடுப்புக்காவலில் இருந்த, சமயத்தில் இந்த சம்பவம் நடந்தது.

“இன்று அதிகாலை மீரிகமவில் சில ஆயுதங்களை மீட்டெடுக்க தாரகவை அழைத்து சென்ற போது பொலிஸாரைத் தாக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார்” என்று பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை, நேற்று முன்தினம் இரவு ஒரு பாதாள உலகக்குழு உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, கொஸ்கொட தாரகவின் சட்டத்தரணி, தாரகவின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்