சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தையின் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை அன்று, முறைப்படி சுதந்திரம் கோருவதற்கு எதிராக தன்னாட்சி பெற்ற தைவானை எச்சரித்தார்.
“நாங்கள் போர்களை விரும்பவில்லை, தற்போதைய நிலை தொடர்ந்தால், சீனா அதை ஏற்றுக்கொள்ளும் என்று நான் நினைக்கிறேன்,” என்று டிரம்ப் ஃபொக்ஸ் நியூஸின் பிரெட் பேயருக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
“ஆனால், ‘அமெரிக்கா எங்களுக்கு ஆதரவளிக்கிறது என்பதால் சுதந்திரம் பெறுவோம்’ என்று யாராவது சொல்வதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.”



