எரிபொருள் விலைகளில் மாற்றம்

Date:

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதன் புதிய விலை ரூ. 281 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லங்கா சூப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை 6 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 329 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேநேரம் 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் விலை ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 293 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை 95 ஒக்டேன் ஒரு லிட்டரின் விலை ரூ. 340 ஆகவும், மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை ரூ. 182 ஆகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

வடமாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸமா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது...

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்