ராதிகாவின் ‘தாய் கிழவி’ ட்ரெய்லர்

Date:

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடித்துள்ள ‘தாய் கிழவி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா பணிபுரிந்து வருகிறார். இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

முற்றிலும் புதிய அவதாரத்தில் ராதிகா சரத்குமார் தோன்றுகிறார். படத்தின் அறிவிப்பின்போது அவரது தோற்றம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஒரு தாய்க்கும் அவரது மகன்களுக்கும் இடையிலான சொத்துப் பிரச்சினையே படத்தின் கதைக்களம் என்பதை ட்ரெய்லரின் மூலம் யூகிக்க முடிகிறது.

எனினும் ராதிகாவின் கதாபாத்திரம் குறித்து ட்ரெய்லரில் பெரிதாக காட்டவில்லை. சிங்கம்புலி, முனீஸ்காந்த், பாலசரவணனின் காமெடிகள் படத்தில் நன்றாக கைகொடுக்கும் என்பது ட்ரெய்லரின் மூலம் தெரிகிறது. இறுதியில் எல்லா கட்சிப் பெயர்களையும் சொல்லும் காட்சி வைரல் ரகம். படம் வரும் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சட்டத்தரணி கொலையாளிகளில் ஒருவர் நாட்டிலிருந்து தப்பிச்சென்று விட்டாரா?

அக்குரேகொடவில் சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட...

81 வயதில் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய முதியவர்!

கிரிபெரியவைச் சேர்ந்த 81 வயதான நிமல் சில்வா, க.பொ.த. சாதாரண தர...

வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த அழுத்த பிரதேசம் பலவீனமடைகிறது!

இலங்கைக்கு வடகிழக்காக வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம், வடகிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்