விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம் பெப்.26

Date:

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடியின் திருமணம் பெப்ரவரி 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி மிகவும் பிரபலம். இருவருமே காதலித்து வந்தாலும், வெளிப்படையாக இருவருமே தங்களுடைய காதலை அறிவித்தது இல்லை. சில தினங்களாக இருவரும் பெப்ரவரி 26ஆம் திகதி திருமணம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை இருவருமே இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

ஆனால், இருவருமே தங்களுடைய திருமண அழைப்பிதழ் கொடுக்கும் பணியினை தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பெப்ரவரி 26ஆம் திகதி உதய்பூரில் உள்ள அரண்மனை ஒன்றில் இருவரது திருமணமும் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நட்புகள் சூழ நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து மார்ச் 4ஆம் திகதி ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது. இதில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்துக் கொள்ளவுள்ளனர். விரைவில் தங்களுடைய திருமணம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...

காயங்களுடன் முதியவரின் சடலம்

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர்...

களுவாஞ்சிக்குடியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்