சாவகச்சேரியில் தன்னைத்தானே சுட்ட சிப்பாய்!

Date:

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட இராணுவப்சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் யாழ் சாவகச்சேரி தம்பு தோட்டத்தில் அமைந்துள்ள 523 ஆவது இராணுவப் படைப்பிரிவு முகாமில் இடம் பெற்றுள்ளது.

இன்று(28) காலை 6 மணி அளவில் குறித்த இராணுவ சிப்பாய் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய எச்.எம்.டபிள்யூ.பீ. பண்டார என்ற சிப்பாய் படுகாயமடைந்தவராவார்.

வயிற்றுப் பகுதியில் படுகாயம் அடைந்த ராணுவ சிப்பாய் சாவகச்சேரி ஆதார் வைத்து சிலை அமைக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூட்டுக்கான காரணம் அறியப்படாத நிலையில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

இமாம் கஸ்ஸாலி வித்தியாலய மாணவர்களுக்கு அமீர் மேர்சா பொது நூலகத்தின் இலவச அங்கத்துவம் வழங்கி வைப்பு

நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலய மாணவர்களுக்கு நிந்தவூர் அமீர் மேர்சா பொது...

“அனுரவே” எம்மை சொந்த நிலங்களில் வாழவிடு – மயிலிட்டி மக்களின் 18 ஆவது வாரக் கண்ணீர்ப் போராட்டம்!

வலிகாமம் வடக்கில் பல தசாப்தங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது சொந்தக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்