சீமானுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் சீர்வரிசையுடன் வந்த அனிதா ராதாகிருஷ்ணன்

Date:

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு குழந்தை பிறந்​திருக்​கும் நிலை​யில், அவரது இல்லத்துக்​கு, முன்​னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஊர்​வல​மாக சீர்வரிசை எடுத்து வந்து வழங்​கி​னார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் – கயல்விழி தம்​ப​தி​யினருக்​கு, முதலா​வ​தாக ஆண் குழந்தை இருக்கும் நிலை​யில், அவர்​களுக்கு இரண்​டாவ​தாக, பெண் குழந்தை கடந்த 22-ம் தேதி பிறந்​தது. இந்​நிலை​யில், நீலாங்​கரை​யில் உள்ள சீமானின் இல்​லத்​துக்கு நாதஸ்​வரம், மேள தாளங்​கள் முழங்க, திரளான பெண்​கள் கூட்​டத்​துடன் முன்​னாள் அமைச்​சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஊர்​வல​மாக நேற்று வருகை தந்​தார். அவருடன் வந்​திருந்த பெண்​கள் பழத்​தட்​டு​களு​டன் சீர்​வரிசையை எடுத்து வந்​திருந்​தனர்.

தன் வீட்​டுக்கு சீர்​வரிசை பொருட்​களை எடுத்து வந்த அனிதா ராதாகிருஷ்ணனை, சீமான் வீட்டுக்கு வெளி​யில் வந்து நின்று முகமலர்ச்​சி​யுடன் வரவேற்​றார். அப்​போது, மரி​யாதை நிமித்தமாக சீமானுக்​கு, பட்டு வஸ்​திரத்தை அனிதா ராதாகிருஷ்ணன் அணி​வித்தார். தொடர்ந்து அவரது கையை பிடித்து சீமான், தனது வீட்​டுக்​குள்ளே அழைத்து சென்​றார்.

அங்​கே, குழந்​தை​யுடன் இருந்த கயல்​விழியை நலம் விசா​ரித்​து, பின்​னர் குழந்​தைக்கு தங்க நகை பரிசளித்தார். அனிதா ராதாகிருஷ்ணன், சீமான் – கயல்​விழி குடும்​பத்​தினருக்கு நீண்ட கால​மாக நல்ல நட்​புடன் இருந்து வரு​கிறார். இந்​நிலை​யில், தம்பதி​யினருக்கு பெண் குழந்தை பிறந்திருக்​கும் சூழலில், மாமன் சீராக, பிறந்த குழந்​தைக்கு சீர்​வரிசை பொருட்​களை அவர் எடுத்து வந்​த​தாக நாதகவினர் தெரி​வித்​தனர்.

spot_imgspot_img

More like this
Related

குவைத்தில் உள்ள அமெரிக்க தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்

நாட்டின் தெற்குப் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானியப் புரட்சிக்...

அமெரிக்க தாக்குதலில் ஈரானின் கடற்படை தளபதி பலி?

ஈரானிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்தியதாகக் கூறப்படும்...

வங்கி விதிமுறை தெரியாமல் விவசாய கடன் தள்ளுபடி அறிவித்துவிட்டு விழிபிதுங்கி நிற்கும் விஜய்

தமிழகத்தில் 14.23 லட்​சம் விவ​சா​யிகள் பயன்​பெறும் வித​மாக பயிர்க் கடனில் ரூ....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்