உக்ரைன் போர் குறித்த தீர்மானத்தை எட்டுவதற்காக ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் பெப்ரவரி 1 ஆம் திகதி அபுதாபியில் மீண்டும் தொடங்க உள்ளன என்று ரஷ்யாவின் இன்டர்ஃபொக்ஸ் செய்தி நிறுவனம் கிரெம்ளினை மேற்கோள் காட்டி புதன்கிழமை தெரிவித்துள்ளது.
நான்கு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த மூன்று வழி பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்று கடந்த வார இறுதியில் அதே இடத்தில் நடந்தது.



