இளங்குமரன் எம்.பி தாக்குதல்: கிராம சேவகர் பொலிசில் முறைப்பாடு!

Date:

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் கடமையிலிருந்த கிராம அலுவரான தன்மை தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பொது மக்கள் முன் தாக்கியதாக தெரிவித்து பரந்தன் உமையாள்புரம் கிராம அலுவலர்
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் நேற்றைய தினம் (29.11.2025) மாலை சுமார் 7 மணியளவில் தான் கடமையிலிருந்து போது சமைத்த உணவு பொதிகளுடன் வந்த பாராளுமன்ற உறுப்பினர் அவற்றை மக்களுக்கு வழங்கப்போவதாக தெரிவித்தார். ஆனால் பிரதேச செயலாளர் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் பணிப்புக்கமைய வெளியிலிருந்து சமைத்த உணவுகள் கொண்டு
வந்து வழங்குவதனை தவிர்க்குமாறும் அவ்வாறு வழங்குவதாக இருப்பினும் உரிய சுகாதார முறைப்படி இருக்க வேண்டும் என்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என்பதனையும் தெரிவித்திருந்தனர்.

எனவே இதற்கமைவாக கிராம அலுவலர் பாராளுமன்ற உறுப்பினரிடம் பிரதேச செயலாளரின் அனுமதியினை பெற்று உணவு பொதிகளை வழங்குமாறு தான் தனது மேலதிகாரிகளின் உத்தரவுகளுக்கமையவே செயற்பட முடியும் என கூறிய போதே
கோபமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் தன் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் கிராம அலுவலர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட யானைக் குட்டி பாதுகாப்பாக மீட்பு!

அனுராதபுரம், மடவாச்சியாவின் வெவல்கெட்டிய பகுதியில் உடல்நலக் குறைவுடன் காணப்பட்ட ஆண் யானைக்...

யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி! தலைமுடி அறுக்கப்பட்டு, கண் பார்வை பாதிக்கும் அளவுக்கு ஆசிரியை மீது தாக்குதல்!

யாழ் நல்லுார்ப் பகுதியில் குடு்ம்பப் பெண் ஒருவர் தலைமுடிகள் அறுக்கப்பட்டு, கடுமையான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்