மன்னார் நானாட்டான் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட அருவி ஆற்றை அண்டிய அறுவை குன்று பகுதியில் நான்கு ஆண்களின் சடலங்கள் இன்றைய தினம் (30) மீட்கப்பட்டுள்ளன.
சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
டிட்தா புயலை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் சடலமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது
இந்த சடலங்கள் நாட்டானிலிருந்து அரிப்பு துறை செல்லும் பிரதான வீதியில் வேலியோரங்களில் சிக்கிக் கிடந்ததை அறுவை குன்று பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்து உயிர் தப்பி அவ்வழியால் வந்த சிலர் இன்று அவதானித்துள்ளனர்
இது தொடர்பாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இராணுவம் மற்றும் கடற்படையினரால் சடலங்கள் மீட்கப்பட்டன.



