பிரித்தானிய உயர்ஸ்தானிகர்- ரில்வின் சந்திப்பு

Date:

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக் (Andrew Patrick) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (14) முற்பகல் பத்தரமுல்ல பெலவத்தை மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையின் நிகழ்கால அரசியல் நிலைமைகள் பற்றியும் பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவுகின்ற நீண்டகால நட்புறவு பற்றியும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன. குறிப்பாக, பிரித்தானியா எதிர்காலத்தில் இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்குமென்றும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இம்மாதம் 21 ஆம் திகதி பிரித்தானியாவுக்கு சுற்றுப்பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதுடன், இதன்போது அதுபற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் பிரிவின் முதனிலை செயலாளர் டொம் சொப்பர் (Tom Soper), அரசியல் ஆலோசகர் இன்ஷாப் மாகர் (Insaf Markar) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவம் செய்து சட்டத்தரணி மது கல்பனா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்