இந்திய – பசிபிக் கடல் பகுதியில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தேவை: அரசுக்கு கடற்படை கோரிக்கை!

Date:

இந்திய – பசிபிக் கடல் பகுதியில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள ஆறு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தேவை என அரசுக்கு கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது.உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக, இந்திய கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங் கூறியதாவது, குஜராத் மாநிலம் கீவாடியாவில் முப்படை கமாண்டர்களின் மாநாடு சமீபத்தில் நடைபெற்றது.

அப்போது, இந்திய – பசிபிக் கடல் பகுதியில் இந்தியா சந்தித்து வரும் சவால்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள கடற்படைக்கு ஆறு அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தேவை என தெரிவிக்கப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் எடுத்து வரும் பணியில் போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த திட்டம் குறித்து பிரதமர் மோடியுடன் சமீபத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தேவை பற்றி பிரதமரிடம் எடுத்துக் கூறப்பட்டது. ராணுவ அமைச்சகத்துடன் ஆலோசிப்பதாக பிரதமர் உறுதியளித்தார். அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தினால் இந்திய – பசிபிக்கடல் பகுதி பாதுகாப்பாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்