கோபிசந்த் படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் மீனா!

Date:

கோபிசந்த் இயக்கத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடங்களில் நடிக்கும் தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மீனாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். மற்றொரு ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிப்பாராம்.

60 வயதானாலும் இன்னும் இளம் ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில் நடித்துக் கொண்டிருக்கிறார் பாலகிருஷ்ணா. அவரின் புதுப்படங்கள் குறித்து அறிவிப்பு வெளியானால் ரசிகர்கள் குஷியாகிவிடுகிறார்கள்.

இந்நிலையில் தான் அவர் கோபிசந்த் இயக்கத்தில் புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். இரண்டு கதாபாத்திரங்களுக்கான லுக்கை தயார் செய்து கொண்டிருக்கிறார்களாம்.

அதில் ஒரு பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மற்றொரு பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக மீனா நடிக்கிறாராம்.

முன்னதாக பாலகிருஷ்ணாவும், மீனாவும் சேர்ந்து முத்துல மொகுடு, பாபிலி சிம்ஹம் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். அந்த பழைய மேஜிக்கை கோபிசந்த் படத்திலும் கொண்டு வருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மீனாவின் கெரியர் தற்போது சூப்பராக சென்று கொண்டிருக்கிறது என்றே கூற வேண்டும். மோகன்லாலுடன் சேர்ந்து அவர் நடித்த த்ரிஷ்யம் 2 படம் அமேசான் பிரைமில் வெளியானது. அந்த படத்திற்கு அனைத்து மொழி ரசிகர்களும் அமோக ஆதரவு அளித்தனர்.

இதையடுத்து த்ரிஷ்யம் 2 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்கள். அதில் வெங்கடேஷுக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார். மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மீனா.

spot_imgspot_img

More like this
Related

உ.பி.யில் டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி சுருட்டிய பெண்

உத்தர பிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜைச் சேர்ந்​தவர் பல்​லவி சிங் ராஜ்புத். இவர்...

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலிப் நாணயத்தாள்களை வைத்திருந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்