நீதிமன்றத்துக்குள் உயிர்மாய்த்த கைதி

Date:

சிறைக்கைதியொருவர் மட்டக்களப்பு – ஏறாவூர் நீதிமன்றில் கழுத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று நேற்று (26.09) மதியம் பதிவாகியுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் தன்வசம் வைத்திருந்தமை மற்றும் களவு தொடர்பாக இவருக்கெதிராக ஏழு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு; விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டிருந்தார். நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்குகளின் பிரகாரம் இவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டிருந்ததது.

இந்நிலையில் மலசல கூடத்திற்குச் சென்ற இவர் அங்கு தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியைக் கிழித்து யன்னலில் கட்டி மற்றைய பகுதியை கழுத்தில் கட்டி தொங்கிய நிலையில் சடலம் காணப்பட்டது.

மலசல கூடத்திற்குச் சென்ற மற்றுமொரு நபர் சடலம் தொங்கியதை அவதானித்து பொலிஸாருக்கு அறித்துள்ளார். இதையடுத்து தடயவியல் பொலிஸார் தடயங்களைச்சேகரித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சட்ட வைத்தியதிகாரி சடலத்தைப் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பித்தார்.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றின் பதில் நீதிபதி வீ. தியாகேஸ்வரன் சம்பவ இடத்தை நேரடியாகப்பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்தார்.

-ருத்திரன்-

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலேவின் மனைவியின் நாடகம் தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியென்ற சந்தேகத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச்...

மட்டக்களப்பில் நெல் விலையை அதிகரிக்க கோரி விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்கக் கோரி இன்று செவ்வாய்க்கிழமை...

FIFA WC | மெஸ்ஸி, எம்பாப்பே சாதனை கோல்: நொக்-அவுட் சுற்றில் அர்ஜெண்டினா, பிரான்ஸ், நோர்வே

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல் பதிவு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்