மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

Date:

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவான் தென்னந்தோட்டம் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கடந்த 23ஆம் திகதி மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

வட்டவான் பகுதியைச் சேர்ந்த கனகரட்ணம் குணசுந்தரம் (வயது 46) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆற்றில் மீன்பிடி தொழில் செய்து வரும் குறித்த நபர் கடந்த 22ஆம் திகதி ஆற்றுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். சென்றவர் திரும்ப வரவில்லை என்று தேடி சென்ற போது 23ஆம் திகதி சடலம் கண்டெடுக்கப்பட்டது .

வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய சம்பவ இடத்துக்குச் சென்ற மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டு மேலதிக பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இவரின் மனைவி மத்திய கிழக்கு நாட்டுக்கு தொழில் வாய்ப்புக்காக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-கிரான் நிருபர்-

spot_imgspot_img

More like this
Related

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...

மட்டக்களப்பில் மனைவியின் சகோதரியை 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தானுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமி...

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்