வயோதிபப்பெண்ணின் சடலம் மீட்பு

Date:

வட்டவளையில் வயோதிபப் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை குயில்வத்த பகுதியைச் சேர்ந்த 62 வயதான வயோதிபப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டின் பின்புறமாக தோட்டத்தில் உள்ள மரத்தில் சேலையால் தூக்கிட்ட நிலையில், அவர் சடலமாக காணப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த மரணத்தில் சந்தேகம் இருப்பதால், சடலமாக மீட்கப்பட்ட வயோதிபப் பெண், தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா செய்யப்பட்டாரா? என பல கோணங்களில் வட்டவளை பொலிஸாருடன் ஹட்டன் தடயவியல் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

திரையரங்கில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மீட்பு

கிரிந்திவெலவில் உள்ள ஒரு திரையரங்கிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல துப்பாக்கிகள், ஆயிரக்கணக்கான...

‘தேனிசை தென்றல்’ தேவா மிகவும் நல்லவர்! – தலைவர்கள் இரங்கல்

தேவாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசு துணைத் தலைவர்...

‘தேனிசை தென்றல்’ தேவா உடலுக்கு முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின், திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி

பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்