தென் சீனக் கடலில் கனடா ஆதிக்கம்!

Date:

சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும்  தென் சீனக் கடலில், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் கூட்டாக  இணைந்து இராணுவப் பயிற்சிகளை நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் வழிநடத்தலில் நடைபெற்ற இப்பயிற்சியில், பிலிப்பைன்ஸ் கடற்படையின் BRP Jose Rizal (வழிநடத்தும் ஏவுகணை கப்பல்), ஆஸ்திரேலியாவின் HMAS Brisbane (ஏவுகணை தாங்கி அழிப்புக் கப்பல்), கனடாவின் HMCS Ville de Québec (படைப்பிரிவு கப்பல்) ஆகியவை பங்கேற்றன.

மேலும், போர் விமானங்களும் பங்கேற்று, விமானத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் சோதிக்கப்பட்டன.

பிலிப்பைன்ஸ் பாதுகாப்புத்துறை, “இப்பயிற்சி பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் எங்கள் உறுதிமொழிக்கான சான்றாகும்” என தெரிவித்துள்ளது.

சீனா இதற்கு உடனடி கருத்து வெளியிடவில்லை. எனினும், Scarborough Shoal உள்ளிட்ட கடல்சார் பகுதிகள் மீது தமக்கே உரிமை உண்டு என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அமைச்சர்கள் வெளியேறியதால் அதிருப்தி

.ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல்...

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக் கழகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாஸ்டர்ஸ் கரம் போட்டி – 2026

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக்கழகம் தனது 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்