சுமந்திரனுடன் சமரசம்: வழக்கை மீளப்பெறுகிறார் வைத்தியர் சிவமோகன்!

Date:

தன்னை கட்சியிலிருந்து இடைநீக்கியதற்கு எதிராக வைத்தியர் சிவமோகன் தாக்கல் செய்த வழக்கை இன்று வாபஸ் பெறுவார் என தெரிகிறது. இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும், சிவமோகனுக்குமிடையில் ஏற்பட்டுள்ள புதிய இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினராக சிவமோகன், கட்சிக்கு எதிராக செயற்பட்டார் என குறிப்பிட்டு எம்.ஏ.சுமந்திரன் தரப்பினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார்.

“முக்கிய விடயங்களில் நான் கட்சிக்குள் எதிர்த்து போராடினேன். அவர்கள் என்னை இடைநிறுத்தினர். நான் வழக்கு தொடர்ந்தேன். அதில் தற்போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அது நல்லதுதானே“ என வைத்தியர் சிவமோகன் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

முல்லைத்தீவிலுள்ள தனது தரப்பினருக்கும் எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையில் நடந்த கலந்துரையாடல்களை தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டதாகவும், தானும், சுமந்திரனும் தொலைபேசியில் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தான் வழக்கை வாபஸ் பெற்றதையடுத்து, தனக்கு எதிரான தடைகள் நீக்கப்பட்டு, தான் கட்சிக்குள் முன்னர் செயற்பட்ட அதே நிலையில் செயற்படுவேன் என்றும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்