ஐ.ம.ச வின் தம்புள்ளை பிரதேசசபை உறுப்பினர்கள் 6 பேர் இடைநிறுத்தம்

Date:

தம்புள்ளை பிரதேச சபையின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் கட்சியின் முடிவுக்கு மாறாகச் செயல்பட்டதற்காக நேற்று முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஐக்கி மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஆறு பேர் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை பிரதேச சபையின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை நியமிப்பதில் கட்சி நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுவின் முடிவுக்கு மாறாகச் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, சுசில் ஹேரத், அனில் இந்திரஜித் தசநாயக்க, தனஞ்ச சம்பத் கரந்தகொல்ல, பிரியரஞ்சன ரத்நாயக்க, குசுமா குமாரி மற்றும் கிருஷாந்தி பிரேமரத்ன ஆகியோரின் கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று நடைபெறஹற தலைவர் தெரிவில், பொதுஜன பெரமுனவும், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களும் தனித்தனியாக களமிறங்கியிருந்தனர். இதில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் W.M. திலகரத்ன தேர்ந்தெடுக்கப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி -...

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

அப்பாச்சி ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க இராணுவம்...

கிளிநொச்சி இளைஞன் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் கனடாவின் பிராம்டன் நகர மேயர்!

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், 24 வயதான சொல்லிசை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்