கடன் தொல்லையால் இந்தியாவுக்கு தப்பிச்சென்ற குடும்பம்

Date:

இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர். அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

இலங்கையில் உள்ள கண்டி மாவட்டம், கம்பளை பகுதியைச் சேர்ந்த முகம்மது கியாஸ் (43), மனைவி பாத்திமா பர்ஹானா (34) இவர்களின் குழந்தைகள் முகம்மது யஹ்யா (12), அலிஷா (4), அமிரா (4) ஆகிய 5 பேர் இலங்கையில் உள்ள தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியில் நேற்று (ஜூன் 9) அதிகாலை வந்து இறங்கினர்.

இதுபற்றி தகவலறிந்த மெரைன் போலீஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இருந்த 5 பேரையும் மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில், முகம்மது கியாஸ் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அங்கு பலரிடம் கடன் பெற்று திருப்பி கொடுக்க முடியாததால் வாழ வழியின்றி தமிழகத்துக்கு குடும்பத்தோடு அகதிகளாக வந்ததாக தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு பின்னர், 5 இலங்கை தமிழர்களும் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் 2022 மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த அகதிகளின் எண்ணிக்கை 319 ஆக உயர்ந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ராமாயணம் குறித்து சர்ச்சை கருத்து: பிரகாஷ்ராஜ் மீது பாஜக போலீசில் புகார்

ராமாயணம் குறித்து சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்ததாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது ஆந்திர...

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 234 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரம் நேற்று மாலை 6 மணி​யுடன் ஓய்ந்​தது....

போர் நிறுத்தத்தை நீடித்தார் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்