26.6 C
Jaffna
January 1, 2025
Pagetamil
சினிமா

அவசியம் என்றால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள் – மகேஷ் பாபு வேண்டுகோள்

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் கோரத் தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,01,078 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஒரே நாளில் 4,187 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் ஒவ்வொரு முறை வெளியே செல்லும்போதும் முகக்கவசம் அணிவதை நினைவில் கொள்ளுங்கள். மிகவும் அவசியம் என்றால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், உங்களை தனிமைப் படுத்திக் கொண்டு தொடர்ந்து உங்கள் அறிகுறிகளை கண்காணியுங்கள். தேவையென்றால் மட்டும் மருத்துவரின் அறிவுரைப்படி மருத்துவமனை சிகிச்சைக்கு அனுமதி பெறுங்கள். அதன்மூலம் தேவையுள்ளவர்களுக்கு படுக்கைகள் கிடைக்கும்.

இந்த கடினமான சூழலிலிருந்து நாம் வலிமையுடன் மீண்டு வருவோம் என்று நம்புகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். இவ்வாறு மகேஷ் பாபு கூறியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பொங்கல் ரேஸில் இருந்து விலகியது ‘விடாமுயற்சி’

Pagetamil

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை

Pagetamil

சல்மான் கான் மீது காதல்: நினைவு கூர்கிறார் சுஷ்மிதா சென்

Pagetamil

‘சூர்யா 44’ பட டைட்டில் டீசர் டிச.25இல் ரிலீஸ்

Pagetamil

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

east tamil

Leave a Comment