எரிபொருள் பவுசர் கவிழ்ந்து விபத்து

Date:

தலவாக்கலை-நுவரெலியா வீதியில் நானுஓயாவின் ரதெல்ல பகுதியில் (14) மாலை எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து வெலிமடைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிச் சென்ற பவுசரும், பாரவூர்தியும் விபத்தில் சிக்கியது. விபத்து நடந்த நேரத்தில், பவுசரின் உள்ளே இருந்த எரிபொருள் வெளியேறிக்கொண்டிருந்தது. உள்ளூர்வாசிகள் எரிபொருளை எடுப்பதை  காண முடிந்தது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்த நிலையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பின்னர் எரிபொருள் இருப்பை வேறொரு பவுசருக்கு மாற்ற நடவடிக்கை எடுத்தது. இந்த சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில்...

அம்பாறை மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்கள் தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்

நாடளாவிய ரீதியில் மீண்டும்   சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறமையினால்  அம்பாறை...

உக்ரைன் விவகாரத்தில் புதின் நியாயமாகவே நடந்து கொள்கிறார்: ட்ரம்ப் பாராட்டு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கூற்றுப்படி, ரஷ்யா "உக்ரைன் விவகாரத்தில் சரியாகவே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்