இறம்பொடை வாகன விபத்தில் 17 பேர் காயம்!

Date:

கொத்மலை – இறம்பொடையில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

நுவரெலியாவிலிருந்து அனுராதபுரம் ராஜாங்கனை நோக்கி பயணித்த வாகனம், கொத்மலை பஸ் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகிலுள்ள புளும்பீல்ட் தோட்ட பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் திரும்பி செல்லும் வழியிலேயே குறித்த வாகனம், வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நிலை மிகவும் மோசமாக இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் குறித்த வாகனம் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

வடமாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸமா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது...

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்