UPDATE: யாழில் இப்படியுமொரு காதல்: நண்பர்களின் அழைப்பு… இளைஞனின் சோக முடிவு… 18 வயது காதலி எடுத்த விபரீத முடிவு!

Date:

தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (17) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

அந்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

சுட்டிபுரம் அம்மன் கோயிலின் பின்புறமுள்ள குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெறும்.

இளைஞன் தனது நண்பர்கள் சிலருடன் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இளைஞனின் மரணத்தில் நண்பர்கள் மீது சந்தேகமுள்ளதாக, உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.

இளைஞனை தொலைபேசியில் அழைத்து குளத்துக்கு கூட்டிச் சென்றதாக உறவினர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கொடிகாமம், தவசிக்குளம் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞனே உயிரிழந்தார்.

இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி நேற்று (17) இரவு வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். மிருசுவில் பகுதியை சேர்ந்த 18 வயதான யுவதியே உயிரிழந்தார்.

அவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரீல்ஸ் எடுக்க 60 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறிய சிறுவன் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகரில், ரீல்ஸ் எடுப்பதற்காக 60 அடி உயர...

வெற்றி பெறும் தவெக வேட்பாளர்களை மாமல்லபுரம் ‘ரிசார்ட்’டில் பாதுகாக்க திட்டம்: நிர்வாகிகள் ரகசிய ஏற்பாடு

இன்று வெளி​யாகும் தேர்​தல் முடிவு​களுக்​குப் பிறகு தனது கட்சி எம்​எல்​ஏ-க்​களை பாது​காக்க...

மணலுடன் சென்ற பூநகரி பிரதேசசபை உழவு இயந்திரத்தை பறிமுதல் செய்த பொலிசார்

பூநகரி பிரதேச சபைக்குரிய உழவு இயந்திரம் ஒன்று அனுமதியற்ற மணலுடன் விசேடஅதிரடிப்படையினரால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்