சிஎஸ்கே அணியில் 17 வயது அதிரடி வீரர் ஆயுஷ் மாத்ரே: ருதுராஜுக்கு மாற்று வீரர்!

Date:

நடப்பு ஐபிஎல் சீசனில் முழங்கை பகுதியில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாக விலகியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கப்டன் ருதுராஜ் கெய்க்வாட். அவருக்கு மாற்றாக அந்த அணியில் 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே இடம்பிடித்துள்ளார்.

வரும் 20ஆம் திகதி மும்பை இந்தியன்ஸ் அணி உடனான ஆட்டத்துக்கு முன்பாக அவர் அணியில் இணைவார் என தகவல். முன்னதாக, சென்னையில் அவர் உட்பட சிலரை ட்ரையலுக்கு வரவித்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம். அதில் ஆயுஷ் மாத்ரேவின் அதிரடி துடுப்பாட்ட பாணி தேர்வாளர்களை ஈர்த்துள்ளது. இதோடு உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதும் அவரை தேர்வு செய்ய காரணமாக அமைந்துள்ளது.

9 முதல் தர போட்டிகளில் 504 ரன்களை ஆயுஷ் மாத்ரே எடுத்துள்ளார். இதில் இரண்டு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடங்கும். 7 லிஸ்ட்-ஏ போட்டிகளில் விளையாடி 458 ரன்கள் எடுத்துள்ளார். இதிலும் இரண்டு சதங்கள் பதிவு செய்துள்ளார். சில நடைமுறைகள் காரணமாக அவர் அணியோடு உடனடியாக இணைய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரே ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளை பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 5 போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

“சிறிமாவோவிடம் ஜே.ஆர். செய்ததை மீண்டும் செய்யாதீர்கள்”: அரசியல் எதிரிகளை நடத்தும் விதம் குறித்து அரசாங்கத்திற்கு தயாசிரி எச்சரிக்கை

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, குற்றவியல் விசாரணைகள் மற்றும் சட்ட...

சிறுமியை சீரழித்த முல்லைத்தீவு ஐயருக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

முல்லைத்தீவில் 2011-ஆம் ஆண்டு, போரினால் இடம்பெயர்ந்த 17 வயது மாணவி ஒருவரை,...

சாக்கடையில் ஓடிய டீசல்… வாளி, கேன்களுடன் முண்டியடித்த மக்கள்! புளூமெண்டலில் பரபரப்பு!

கொழும்பு, புளூமெண்டல் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு முனையத்தில் இன்று (21)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்