வவுனியா பம்பைமடுப் பகுதியில்உள்ள நீர்தேக்கத்தில் (கருங்கல் அகழ்வதற்காக வெட்டப்பட்ட குழி) மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இன்று (7) வவுனியா பம்பைமடுப்பகுதியில் அமைந்துள்ள குறித்த நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிப்பதற்காக 5பேர் கொண்ட குழுவினர் சென்றுள்ளனர்.
இதன்போது நபர் ஒருவர் நீர்தேக்கத்தில் இறங்கிய நிலையில், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கியுள்ளார்.
இதனை அவதானித்த ஏனைய நபர்கள் நீரில் இறங்கி அவரை தேடியுள்ளனர். எனினும் அவரை மீட்க முடியவில்லை.
சம்பவம் தொடர்பாக கிராமமக்களுக்கும் பொலிசாருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
மூழ்கிய நபரை மாலை 3 மணியளவில் இருந்து 6 மணிவரை கிராமத்து இளைஞர்கள் தேடியபோதும் அவரை மீட்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றிருந்தனர்.
சம்பவத்தில் கற்பகபுரம் பகுதியை சேர்ந்த ரவி (50) என்ற குடும்பஸ்தரே மாயமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





